search icon
என் மலர்tooltip icon

    கார்

    முதற்கட்டமாக ஆறு எலெக்ட்ரிக் கார்கள் - ஸ்கோடா வெளியிட்ட சூப்பர் தகவல்!
    X

    முதற்கட்டமாக ஆறு எலெக்ட்ரிக் கார்கள் - ஸ்கோடா வெளியிட்ட சூப்பர் தகவல்!

    • ஸ்கோடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது.
    • முற்றிலும் புதிய தலைமுறை கோடியக் மாடல் டீசரை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

    ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன துறையில் முழுமையாக களமிறங்குவது வாகன உற்பத்தியாளர்களுக்கு சற்றே சவாலான காரியம் ஆகும். இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் படிப்படியாக களமிறங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த இலக்கை அடையும் நோக்கில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எதிர்கால திட்டம் தீட்டி ஒவ்வொரு கால இடைவெளிக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கின்றன.

    அந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் பல்வேறு பாடி ஸ்டைல்களில், வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற உள்ளன.

    முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி துவங்கி சிறிய எலெக்ட்ரிக் வாகனம் என பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் தனது எதிர்கால ஐசி என்ஜின் மாடல்கள் பற்றியும் தகவல் தெரிவித்து இருக்கிறது.

    என்யாக் குடும்ப மாடல் வரிசையில், அனைத்து எலெக்ட்ரிக் மாடல்களும் 4.1 மீட்டர் நீளமும், சிறிய மாடல்கள், 4.5 மீட்டர் நீளம் கொண்ட காம்பேக்ட் மாடல், 4.7 மீட்டரில் காம்பி எஸ்டேட் அல்லது 7 சீட்டர் ஸ்பேஸ் எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட இருக்கிறது. காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எல்ராக் என்று அழைக்கப்பட உள்ளது.

    எல்ராக் மாடல் கரோக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் 2024 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்யாக் சீரிசில் என்யாக் ஐவி கூப் மாடல் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்டேட் மாடல் மற்றும் 7 சீட்டர் ஸ்பேஸ் எலெக்ட்ரிக் மாடல் விஷன் 7எஸ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த மாடல் 2026 ஆண்டு அறிமுகமாகிறது.

    இந்த மாடல்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் முற்றிலும் புதிய சூப்பர்ப் மற்றும் கோடியக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கோடியக் மாடலின் டீசரையும் ஸ்கோடா வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இத்துடன் மேம்பட்ட ஆக்டேவியா மாடலும் இணைய இருக்கிறது. இதற்கு முன்பாக ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    Next Story
    ×