search icon
என் மலர்tooltip icon

    கார்

    லிட்டருக்கு 40 கி.மீ. மைலேஜ்.. தீவிர டெஸ்டிங்கில் முற்றிலும் புதிய ஸ்விஃப்ட்
    X

    லிட்டருக்கு 40 கி.மீ. மைலேஜ்.. தீவிர டெஸ்டிங்கில் முற்றிலும் புதிய ஸ்விஃப்ட்

    • புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலும் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக யூனிட்கள் விற்பனை.
    • புதிய Z12 என்ஜின் லிட்டருக்கு கிட்டத்தட்ட 40 கி.மீ. வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேச்பேக் மாடல் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய ஸ்விஃப்ட் மாடல் அதன் மூன்றாவது தலைமுறையில் உள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹேச்பேக் மாடலாகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலும் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

    அந்த வகையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக யூனிட்கள் விற்பனையாகும் என்று தெரிகிறது. மேலும் புதிய ஸ்விஃப்ட் மாடலில் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் Z12 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது 400சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய Z12 என்ஜின் லிட்டருக்கு கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் மைலேஜ் அடிப்படையில் ஸ்கூட்டர்களுக்கே போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

    Next Story
    ×