search icon
என் மலர்tooltip icon

    கார்

    வேற மாதிரி உருவாகும் முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    வேற மாதிரி உருவாகும் முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • புதிய டஸ்டர் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
    • புதிய டஸ்டர் மாடல் மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும்.

    ரெனால்ட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய டஸ்டர் எஸ்.யு.வி.-யை நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த மாடல் 2025 ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    புதிய டஸ்டர் மாடலில் எண்ட்ரி லெவல் 120 ஹெச்.பி. பவர் திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 140 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த டஸ்டர் மாடலாக இது இருக்கும்.

    இதுதவிர முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் மாடலின் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட வெர்ஷனும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது பிக்ஸ்டர் எஸ்.யு.வி. என்று அழைக்கப்படலாம். இந்த கார் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே புதிய டஸ்டர் மாடல் 2025-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இது தற்போது எஸ்.யு.வி. சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

    Next Story
    ×