என் மலர்tooltip icon

    கார்

    விற்பனையில் அசுர வளர்ச்சி... மாஸ் காட்டிய மாருதி சுசுகி
    X

    விற்பனையில் அசுர வளர்ச்சி... மாஸ் காட்டிய மாருதி சுசுகி

    • ஜிம்னி மாடலின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 16.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • மாருதி சுசுகி ஜிம்னி காரில் கன்மெட்டல் கிரே நிற கிரில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் மாருதி சுசுகியின் ஜிம்னி. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், இந்த மாடலின் விற்பனை நல்லமுறையில் தான் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில், கடந்த மே 2025 இல் மாருதி சுசுகி ஜிம்னி 1.5 மடங்கு விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    மாருதி சுசுகி ஜிம்னி 4X4 ஆஃப்-ரோடர் இந்த ஆண்டு மே மாதம் 682 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனையான 274 யூனிட்களை விட அதிகம் ஆகும். இந்த விற்பனை உயர்வு ஜிம்னிக்கு 149 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

    ஜூன் 2023 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

    மாருதி சுசுகி ஜிம்னி மாடல் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 105 hp பவரையும் 134 Nm டார்க்கையும் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.



    ஜிம்னி மாடலின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 16.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதே நேரத்தில் ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 16.39 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

    மாருதி சுசுகி ஜிம்னி காரில் கன்மெட்டல் கிரே நிற கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது குரோம் முலாம் பூசப்பட்டும், ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது. மற்ற முக்கிய வெளிப்புற சிறப்பம்சங்களில் வட்ட வடிவ LED ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டு மற்றும் பின்புற விளிம்புகளில் டிரிப் ரெயில் உள்ளன. ஜிம்னி லேடர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 15 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி ஜிம்னியின் உட்புறத்தில், ஆல்பா வேரியண்டில் 9 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஜீட்டா வகைகளில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை போன்ற அம்சங்களைப் பெறுகிறது. இது ஆர்காமிஸின் சரவுண்ட் சென்ஸ், 4-ஸ்பீக்கர் செட்டப் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி ஆகியவற்றையும் பெறுகிறது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி ஜீட்டா வேரியண்டின் விலை ரூ.12.76 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. மேலும் ஆல்பா வேரியண்ட் ரூ.13.71 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

    Next Story
    ×