என் மலர்
கார்

அடுத்த வாரம் முன்பதிவு.. ஜூலை 5-ல் வெளியாகும் மாருதி இன்விக்டோ!
- மாருதியின் புதிய இன்விக்டோ எம்பிவி மாடலின் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
- மாருதி இன்விக்டோ மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கும் என தகவல்.
மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படும் என உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய இன்விக்டோ மாடலுக்கான முன்பதிவு ஜூன் 19-ம் தேதியும், வெளியீடு ஜூலை 5-ம் தேதியும் நடைபெற இருக்கிறது.
இன்னோவா ஹைகிராஸ் போன்று இல்லாமல், மாருதி இன்விக்டோ மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இத்துடன் e-CVT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் ஹைப்ரிட் மோட்டார் கூடுதலாக 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டிசைனை பொருத்தவரை மாருதி இன்விக்டோ மாடலில் முன்புற பம்ப்பர் டுவீக் செய்யப்பட்டு, புதிய கிரில் மற்றும் 2 க்ரோம் ஸ்லாட்கள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. புதிய இன்விக்டோ மாடலின் இன்டீரியர் பற்றி மாருதி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
எனினும், இந்த மாடலில் பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேடெட் மற்றும் பவர்டு முன்புற இருக்கைகள், இரண்டாம் அடுக்கில் ஒட்டோமேன் இருக்கைகள், ADAS, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.






