search icon
என் மலர்tooltip icon

    கார்

    காஸ்மடிக் மாற்றங்களுடன் கியா சொனெட் ஸ்பெஷல் எடிஷன் - இந்தியாவில் அறிமுகம்!
    X

    காஸ்மடிக் மாற்றங்களுடன் கியா சொனெட் ஸ்பெஷல் எடிஷன் - இந்தியாவில் அறிமுகம்!

    • புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் HTX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எடிஷன் மாடல் HTX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சொனெட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆரோக்ஸ் எடிஷன் மாடல் HTX மற்றும் HTX+ வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    முந்தைய ஆனிவர்சரி எடிஷனை போன்றே புதிய ஆரோக்ஸ் எடிஷனிலும் பிரமாண்ட ஸ்கிட் பிலேட்கள், முன்புற பம்ப்பர், கிரில், டோர் சில்கள், ரியர் ஸ்கிட் பிலேட் மற்றும் செண்டர் வீல் கேப்களில் டேஞ்சரைன் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கிரில் பகுதியிலும் ஆரோக்ஸ் பேட்ஜிங் டேஞ்சரைன் அக்செண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் - கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பியல், ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் கிலேசியர் வைட் பியல் என்று நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. HTX வேரியண்டில் உருவாக்கப்பட்டு இருப்பதால், சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த மாடலில் 8.0 இன்ச் டச் ஸ்கிரின், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், சிங்கில் பான் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பிற்கு நான்கு ஏர்பேக், சீட்பெல்ட் ரிமைண்டர்கள், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் 120 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 116 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு iMT, பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடல் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மாருதி சுசுகி Fronx, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×