என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
செல்டோஸ் டீசல் என்ஜினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கிய கியா - விலை எவ்வளவு தெரியுமா?
- கியா செல்டோஸ் தற்போது 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- டீசல் மேனுவல் வெர்ஷனை கியா இந்தியா அறிமுகம் செய்தது.
கியா இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட செல்டோஸ் மாடலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த காரின் டீசல் மேனுவல் வெர்ஷனை கியா இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
கியா செல்டோஸ் புதிய வெர்ஷன் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 18 லட்சத்து 27 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்துள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுவரை 114 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு iMT மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலை தற்போது மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் 6 ஸ்பீடு டீசல் மேனுவல் ஆப்ஷனையும் தேர்வு செய்ய முடியும்.
அம்சங்களை பொருத்தவரை கியா செல்டோஸ் மாடலில் இரட்டை 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-பேன் பானரோமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 17 இன்ச் அளவில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.