search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா கரென்ஸ் புது வேரியண்ட்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா கரென்ஸ் புது வேரியண்ட்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • புதிய வேரியண்டில் டாப் எண்ட் ஆறு பேர் அமரும் இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
    • கியா கரென்ஸ் X லைன் வேரியண்ட் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்.பி.வி. மாடலின் வேரியண்ட்களை அப்டேட் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிதாக கரென்ஸ் X லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 45 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய வேரியண்டில் டாப் எண்ட் மாடல் ஆறு பேர் அமரும் இருக்கை அமைப்பில் மட்டுமே கிடைக்கிறது. கியா கரென்ஸ் X லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும், 7 ஸ்பீடு DCT மற்றும் 6 ஸ்பீடூ ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் மேட் கிராஃபைட், கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    கியா கரென்ஸ் X லைன் மாடல் டூயல் டோன் 16 இன்ச் க்ரிஸ்டல் கட் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. காரின் உள்புறம் ஸ்பிலென்டிட் சேஜ் கிரீன் மற்றும் டூ-டோன் பிளாக் என இருவித இன்டீரியர் தீம் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்-ஐ ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும்.

    புதிய கியா கரென்ஸ் X லைன் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டர்போ பெட்ரோல் வெர்ஷனில் 7 ஸ்பீடு டி.சி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    1.5 லிட்டர் டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×