search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் விவரங்கள் வெளியீடு
    X

    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் விவரங்கள் வெளியீடு

    • ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை சமீபத்தில் அறிவித்தது. மேலும் இரு கார்களுக்கான முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் வெளியீடு இந்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில், ஆரா மாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் தற்போது நான்கு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இவைதவிர ஆறு ஏர்பேக், இஎஸ்சி மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் புது ஆரா மாடலில் உள்ள ஹெட் ரெஸ்டிரைண்ட்கள் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டுள்ளன. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இரு அனலாக் காஜ்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ஸ்பீடோமீட்டராகவும் மற்றொன்று டகோமீட்டராகவும் செயல்படுகின்றன. மேலும் புதிதாக 3.5mm எம்ஐடி டிஸ்ப்ளே, டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வெர்னா, i20, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களில் உள்ளதை போன்று புது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் ஸ்டாரி நைட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 83 ஹெச்பி பவர், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 69 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு யூனிட்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×