search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் நடைபெறும் ஹோண்டா எஸ்யுவி சர்வதேச வெளியீடு - எப்போ தெரியுமா?
    X

    இந்தியாவில் நடைபெறும் ஹோண்டா எஸ்யுவி சர்வதேச வெளியீடு - எப்போ தெரியுமா?

    • புதிய கார் எஸ்யுவி மாடலில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும்.
    • முன்னதாக விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட தனது முதல் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை ஜூன் 6 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சி மூலம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் ஹோண்டா எலிவேட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் இது முதற்கட்டமாக இந்தியாவில் வெளியாகி அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய கார் எஸ்யுவி மாடலில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்பை படங்களில் இந்த கார் முகப்பு பகுதி பிரமாண்டமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக தாய்லாந்தில் விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    அதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஹோண்டா எஸ்யுவி அனைவரையும் திரும்பி பார்க்க செய்வதோடு, ஹோண்டாவுக்கு சாதகமான பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். சற்றே தடிமனான கிளாடிங், மஸ்குலர் வீல் ஆர்ச்கள், அதிகளவு க்ரோம் அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் அழகிய எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    பின்புறம் டெயில் லைட்கள் புதிய ஹோண்டா வாகனங்களில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. அசத்தலான மிட்-சைஸ் மாடலை அறிமுகம் செய்வதில் ஹோண்டா மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், டைகுன், குஷக் போன்ற மாடல்களை போட்டியில் எதிர்கொள்ளும் வகையில் இந்த எஸ்யுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே என்ஜின் சமீபத்திய ஹோண்டா சிட்டி மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த காரில் டீசல் யூனிட் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    Next Story
    ×