search icon
என் மலர்tooltip icon

    கார்

    தேதி குறிச்சாச்சு.. விரைவில் இந்தியா வரும் ஹோண்டா எலிவேட்..!
    X

    தேதி குறிச்சாச்சு.. விரைவில் இந்தியா வரும் ஹோண்டா எலிவேட்..!

    • ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் மிட்-சைஸ் எஸ்.யு.வி. விரைவில் இந்தியா வருகிறது.
    • ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் எலிவேட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் செப்டம்பர் 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எலிவேட் மாடல் இந்திய சந்தையில், கிரெட்டா மற்றும் செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலை நிறுத்தப்படும் ஹோண்டா எலிவேட் மாடல் அந்நிறுவனத்தின் சிட்டி மற்றும் அமேஸ் போன்ற செடான் மாடல்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் SV, V, VX மற்றும் ZX வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 119 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT யூனிட் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா எலிவேட் மேனுவல் வேரியன்ட்கள் லிட்டருக்கு 15.31 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் CVT வேரியன்ட்கள் லிட்டருக்கு 16.92 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    Next Story
    ×