search icon
என் மலர்tooltip icon

    கார்

    பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
    X

    பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் M8 காம்படீஷன் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்தது.
    • இது M சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் சீரிசில் ஏழாவது மாடல் ஆகும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது M சீரிசின் 50-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 10 ஸ்பெஷல் எடிஷன் M மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வரிசையில், பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் 5- ஜாரெ M எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் 50 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 2 கோடியே 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய M8 காம்படீஷன் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் சக்திவாய்ந்த வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4.4 லிட்டர், ட்வின் டர்போ வி8 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    50 ஜாரெ M எடிஷனில் M8 மாடல் ஐல் ஆப் மேன் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் M ப்ரூக்லின் கிரே மற்றும் அவென்ட்யுரின் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டேடோனா புளூ, புரோசன் பிரிலியண்ட் வைட், புரோசந் மரினா பே புளூ, புரோசன் டீப் கிரீன் மற்றும் புரோசன் டீப் கிரே போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. M கார்பன் பைபர் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ லேசர்லைட் இடம்பெற்று உள்ளது.

    காரின் உள்புறம் லெதர் மெரினோ இருக்கை மேற்கவர்கள், M சீட் பெல்ட்கள், அல்காண்ட்ரா ஹெட்லைனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் M கார்பன் பேக்கேஜ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×