search icon
என் மலர்tooltip icon

    கார்

    2023 கியா சொனெட் இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 கியா சொனெட் இந்தியாவில் அறிமுகம்

    • கியா நிறுவனத்தின் புதிய 2023 சொனெட் மாடலின் டீசல் வேரியண்ட்களில் iMT பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • 2023 கியா சொனெட் மாடலில் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி அனைத்து பவர்டிரெயின்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சொனெட் மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய கியா சொனெட் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த எஸ்யுவி-யில் தற்போது வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்கள் RDE மற்றும் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மேம்பட்ட சொனெட் மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு ஏற்ப 2023 மாடலில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2023 கியா சொனெட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய மாடலிலும் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், நேவிகேஷன், 4.2 இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், எல்இடி மூட் லைட்கள், டர்போ DCT வெர்ஷன்களில் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்படுகின்றன.

    2023 கியா சொனெட் மாடலில் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு iMT அல்லது 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது 6 ஸ்பீடு iMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×