search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி செலரியோ
    X
    மாருதி சுசுகி செலரியோ

    இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் கார்களை விற்ற மாருதி சுசுகி

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் கார்களை விற்பனை செய்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவன்ம இந்திய சந்தையில் மொத்தம் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    தற்சமயம் மாருதி நிறுவனம் ஆட்டோ கியர் ஷிஃப்ட், டார்க் கன்வெர்ட்டர் மற்றும் சி.வி.டி. போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சமீப காலமாக இந்நிறுவன வாகனங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டவைகளின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது. 

    ஆட்டோ கியர் ஷிஃப்ட் அதாவது ஏ.ஜி.எஸ். வசதியினை மாருதி நிறுவனம் ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களில் வழங்கி வருகிறது. டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் எர்டிகா, சியாஸ் மற்றும் எக்ஸ்.எல்.6 மாடல்களிலும் சி.வி.டி. யூனிட் பலேனோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி செலரியோ

    மாருதி நிறுவன வாகனங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் காராக செலரியோ மாடல் வெளியிடப்பட்டது. இந்த கார் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. செலரியோ மாடலில் ஏ.ஜி.எஸ். வசதி வழங்கப்பட்டது.

    இந்திய சந்தையில் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, பூனே மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு அதிகளழு வரவேற்பு கிடைத்து இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×