search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 ஹோண்டா சிட்டி
    X
    2020 ஹோண்டா சிட்டி

    2020 ஹோண்டா சிட்டி தாய்லாந்தில் அறிமுகம்

    ஹோண்டா நிறுவன்த்தின் 2020 சிட்டி கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹோண்டா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடல் காரை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி செடான் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    2020 ஹோண்டா சிட்டி தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை விட நீளமாக இருக்கிறது. காரின் முன்புறம் அதிகளவு தடிமனான குரோம் ஸ்ட்ரிப் கொண்டிருக்கிறது. இது ஹோண்டா சிவிக் மற்றும் அமேஸ் மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.

    குரோம் ஸ்ட்ரிப் கீழ் மெல்லிய கிரில், நடுவே ஹோண்டா லோகோ இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் ராப்-அரவுண்ட் ஸ்டைல், டி.ஆர்.எல்.கள் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி

    புதிய ஹோண்டா காரில் 15 இன்ச் வீல்கள், புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. டெயில் லேம்ப்களை தவிர காரின் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    தற்சமயம் விற்பனையாகும் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஹோண்டா சிட்டி 100 எம்.எம். நீளமாகவும், 53 எம்.எம். அகலமாகவும் இருக்கிறது. இதன் உயரம் மற்றும் வீல்பேஸ் முறையே 28 எம்.எம். மற்றும் 11 எம்.எம். வரை குறைக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்தில் புதிய ஹோண்டா சிட்டி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 122 பி.ஹெச்.பி. பவர் 173 என்.எம். டார்க் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம். 
    Next Story
    ×