search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட டாடா டிகோர் இந்தியாவில் அறிமுகம்
    X

    ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட டாடா டிகோர் இந்தியாவில் அறிமுகம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட டாடா டிகோர் காரை அறிமுகம் செய்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டிகோர் காரின் ஏ.எம்.டி. (ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்) வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய டிகோர் ஏ.எம்.டி. கார்: XMA மற்றும் XZA பிளஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.6.39 லட்சம் மற்றும் ரூ.7.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வி மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இதனால் புதிய டிகோர் ஏ.எம்.டி. மாடலில் 1.2 லிட்டபர் 3 சிலிண்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் டாடா டியாகோ ஏ.எம்.டி. மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    டாப் எண்ட் XZA பிளஸ் மாடலில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி மற்றும் ஹார்மன் டியூன் செய்யப்பட்ட 8 ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோ-ஃபோல்டு விங் மிரர்கள், இன்டகிரேட்டெட் எல்.இ.டி. உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    டாடா டிகோர் கார் 1.1 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    டீசல் என்ஜின் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக டாடா நிறுவனம் டிகோர் ஜெ.டி.பி. எனும் அதிக செயல்திறன் கொண்ட மாடலை வழங்குகிறது.

    இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோடிரான் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிகோர் ஜெ.டி.பி. கார் விலை ரூ.7.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×