search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டிவிஎஸ் ரேடியான்- குறைந்த விலையில் புது எடிஷன் அறிமுகம்.. என்ன ஸ்பெஷல்?
    X

    டிவிஎஸ் ரேடியான்- குறைந்த விலையில் புது எடிஷன் அறிமுகம்.. என்ன ஸ்பெஷல்?

    • புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக் 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளின் ஆல்-பிளாக் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ரேடியான் மாடலின் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். அந்த வகையில், இந்த வேரியண்ட் விலை ரூ. 59 ஆயிரத்து 880, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டிவிஎஸ் ரேடியான் மாடல் தற்போது மூன்று (பேஸ், டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க்) வெவ்வேறு வேரியண்ட்கள் மற்றும் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் கொண்ட வேரியண்ட் கிளாஸ் பிளாக் ஃபினிஷ், வைட் இன்சர்ட்களை கொண்டிருக்கிறது.


    இத்துடன் டிவிஎஸ் மற்றும் ரேடியான் பேட்ஜிங் கான்டிராஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஒட்டுமொத்தோற்றம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் கவர் மட்டும் பிரான்ஸிஷ் கோல்டு நிறம் கொண்டிருக்கிறது.

    மற்ற ரேடியான் மாடல்களில் உள்ளதை போன்ற 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×