என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் வெளியாகும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் - சூப்பர் டீசர் வெளியீடு
    X

    விரைவில் வெளியாகும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் - சூப்பர் டீசர் வெளியீடு

    • ஒரு உலோக மெஷ் மூலம் பாதுகாக்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.
    • 398 சிசி ஒற்றை-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு இருக்கும்.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது மலிவு விலை 400 சிசி பைக்குகளின் வேறுபாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்த வரிசையில் ஸ்க்ராம்ப்ளர் 400 X இன் ஆஃப்-ரோடு வகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்க்ராம்ப்ளர் 400 XC என்று அழைக்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த பைக் பல்வேறு கட்டங்களில் சோதனைக்குட்பட்டது. வடிவமைப்பிலிருந்து தொடங்கி, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC ஆஃப்-ரோடிங்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

    ஒரு உலோக மெஷ் மூலம் பாதுகாக்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது. கூடுதலாக, பைக்கில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்ட ஒரு பீக் உள்ளது. இது புதிய பெயிண்ட் ஸ்கீம் விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. அதைத் தவிர, பைக் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், கிராஸ்-ஸ்போக் டியூப்லெஸ் வீல்கள், ஹெட்லேம்ப்-இன் மேல் வைக்கப்பட்டுள்ள வைசர் மற்றும் எஞ்சினுக்கு சிறந்த சம்ப் கார்டு ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC-யின் வன்பொருள் பெரும்பாலும் அதன் முந்தைய மாடல்களை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிறந்த ஆஃப்-ரோடு செயல்திறனுக்காக சஸ்பென்ஷன் அமைப்புக்கு இது வேறுபட்ட டியூனிங்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், 398 சிசி ஒற்றை-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு இருக்கும்.

    இந்த யூனிட் 39 ஹெச்பி பவரையும் 37 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 XC ரூ.2.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது ஸ்க்ராம்ப்ளர் 400 X உடன் ஒப்பிடும்போது ரூ.27,000 அதிகம்.

    Next Story
    ×