search icon
என் மலர்tooltip icon

    பைக்

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா - எத்தனை யூனிட்கள் தெரியுமா?
    X

    உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா - எத்தனை யூனிட்கள் தெரியுமா?

    • சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • 2006 பிப்ரவரி மாத வாக்கில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது இந்திய பணிகளை துவங்கியது.

    சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் பிரிவு சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வாகன உற்பத்தியில் 70 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. குருகிராமை அடுத்த கெர்கி தௌலா ஆலையில் இருந்து 70 லட்சமாவது யூனிட்டை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.

    70 லட்சமாவது யூனிட் சுசுகி வி ஸ்டார்ம் SX மாடல் ஆகும். இந்த யூனிட் மஞ்சள் நிற வேரியண்ட் ஆகும். 2006 பிப்ரவரி மாதம் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் பணிகளை துவங்கியது.

    "மார்ச் 2023 வரை நிறைவுற்ற நிதியாண்டில் மட்டும் நாங்கள் 9 லட்சத்து 38 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறோம். எங்களின் வருடாந்திர வளர்ச்சி 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 24.3 சதவீதம் ஆகும்," என்று சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி உமெடா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் சுசுகி வி ஸ்டார்ம் SX, ஜிக்சர் SF 250, ஜிக்சர் SF, ஜிக்சர், அக்சஸ் 125, அவெனிஸ், பர்க்மேன் ஸ்டிரீட் மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் EX போன்ற மாடல்களை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் வி ஸ்டார்ம் 650XT, கட்டானா மற்றும் ஹயபுசா போன்ற மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    Next Story
    ×