search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டெஸ்டிங்கில் சிக்கிய புதிய கேடிஎம் டியூக்
    X

    டெஸ்டிங்கில் சிக்கிய புதிய கேடிஎம் டியூக்

    • கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை டியூக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • கேடிஎம் டியூக் மாடல்களின் புதிய வெர்ஷன் ரிடிசைன் செய்யப்பட்ட பாடிவொர்க் மற்றும் பின்புற சப்ஃபிரேம் கொண்டிருக்கிறது.

    கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை டியூக் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களில் புதிய டியூக் மாடல்கள் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த வரிசையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட டியூக் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல்களை காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் வழிகளில் அப்டேட் செய்ய கேடிஎம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் எல்இடி ஹெட்லைட் தற்போதைய மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக உள்ளது. இதே போன்று டேன்க் கவர்கள் பெரியதாகவும், கூர்மையாகவும் காட்சியளிக்கின்றன. இவை பைக்கிற்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. இதில் உள்ள ரியர் சப்ஃபிரேமும் வித்தியாசக காட்சியளிக்கிறது.

    அடுத்த தலைமுறை டியூக் மாடல்களில் கேடிஎம் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களில் உள்ள என்ஜினையே வழங்கும் என தெரிகிறது. எனினும், இவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு சிறப்பான ஹீட் மேனேஜ்மெண்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இதே போன்ற அப்டேட் சமீபத்திய கேடிஎம் RC மாடலில் டூயல் ரேடியேட்டர் ஃபேன்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாற்றப்படாது என்றே கூறப்படுகிறது.

    இவைதவிர புதிய மாடல்களில் டிஎஃப்டி டேஷ்போர்டு, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் வழக்கமான விவரங்களை கொண்டிருக்கும். டெஸ்டிங்கில் காணப்படும் கேடிஎம் டியூக் மாடலில் முன்புறம் யுஎஸ்டி ஃபோர்க்குகள், அளவில் பெரிய முன்புற டிஸ்க் பிரேக் இடம்பெற்று இருக்கிறது. அலாய் வீல்கள் மேம்பட்ட RC மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை 390 டியூக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போது டெஸ்டிங்கில் உள்ள கேடிஎம் டியூக் மாடல் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையிலேயே காணப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பெருமளவு அப்டேட்களை எதிர்கொள்ளும் புதிய கேடிஎம் டியூக் விலை முந்தைய வெர்ஷனை விட கணிசமான அளவு அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

    Source: Bikewale | motociclismo

    Next Story
    ×