search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஹோண்டா பைக்கிற்கு புதிய டீசர்.. ஆனால் இதை மட்டும் கேட்காதீங்க..!
    X

    ஹோண்டா பைக்கிற்கு புதிய டீசர்.. ஆனால் இதை மட்டும் கேட்காதீங்க..!

    • புதிய மாடலில் யுனிகான் 160 அல்லது ஹார்னெட் 2.0 மாடலில் வழங்கப்படும் என்ஜினே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
    • இந்த பிரிவுகளில் ஹோண்டா நிறுவனம் தற்போது இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான புது டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், புதிய ஹோண்டா பைக் பெயர் மர்மமாகவே இருக்கிறது. டீசர்களின் படி இந்த மோட்டார்சைக்கிள் டூயல் டோன் பினிஷ், விமானங்களில் உள்ளதை போன்ற தோற்றம் கொண்ட பியூவல் கேப் வழங்கப்படுகிறது.

    முந்தைய டீசர்களில் இந்த மோட்டார்சைக்கிள் டெயில் லைட் எப்படி காட்சியளிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பெயரை போன்றே இதன் அறிமுக தேதி பற்றிய விவரங்களையும் ஹோண்டா நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹோண்டா பைக் 150 சிசி முதல் 180 சிசி பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவுகளில் ஹோண்டா நிறுவனம் தற்போது இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவை யுனிகான் 160 மற்றும் சிபி ஹார்னெட் 2.0 ஆகும்.

    புதிய மாடலில் யுனிகான் 160 அல்லது ஹார்னெட் 2.0 மாடலில் வழங்கப்படும் என்ஜினே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. யுனிகான் 160 மாடலில் 162.7சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.73 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹார்னெட் 2.0 மாடலில் 184.4சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 17.03 ஹெச்பி பவர், 16.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×