என் மலர்

  பைக்

  கேடிஎம்-இன் குறைந்த விலை பைக் இந்தியாவில் அறிமுகம்
  X

  கேடிஎம்-இன் குறைந்த விலை பைக் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியூக் மாடல்களை புதிய OBD 2 விதகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது.
  • புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

  கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள், 125 டியூக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரோட்ஸ்டர் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புதிய கேடிஎம் பைக் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 892 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  இத்துடன் 2023 கேடிஎம் 390 டியூக் மாடலும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேடிஎம் 390 டியூக் மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டார்க் கல்வேனோ மற்றும் லிக்விட் மெட்டல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

  கேடிஎம் 125 டியூக் மாடலும் எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் செராமிக் வைட் என இருவித நிறங்களிலேயே கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், டுவின் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏபிஎஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

  2023 கேடிஎம் 125 டியூக் மாடலில் 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் போஷ் எலெக்டிரானிக் ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.3 ஹெச்பி பவர், 12 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

  2023 கேடிஎம் 390 டியூக் மாடலில் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×