search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஹோண்டா ஷைன் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    ஹோண்டா ஷைன் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

    • ஹோண்டா ஷைன் 125 புதிய வெர்ஷன் அதன் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
    • புதிய ஹோண்டா ஷைன் 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலின்டர் என்ஜின் உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD 2 விதிகளுக்கு பொருந்தும் புதிய ஷைன் 125 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் கம்யூட்டர் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் ஹோண்டா ஷைன் 125 மாடலின் புதிய வெர்ஷன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹோண்டா ஷைன் OBD 2 வெர்ஷனின் விலை ரூ. 79 ஆயிரத்து 800 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 83 ஆயிரத்து 800 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் இரண்டு புறமும் டிரம் பிரேக்குகளை கொண்டிருக்கின்றன. இதன் டாப் எண்ட் மாடல் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது.

    ஸ்டைலிங் அடிப்படையில் 2023 ஹோண்டா ஷைன் 125 புதிய வெர்ஷன் அதன் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கௌல், முன்புற ஃபென்டர் சிங்கில் பீஸ் சீட், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், 5 ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகிறது.

    ஹெட்லைட் கவர், சைடு பேனல்கள், மஃப்ளர் ஹெட் கவர் உள்ளிட்டவைகளில் க்ரோம் எலிமென்ட்கள் உள்ளன. புதிய ஷைன் 125 மாடலின் இரண்டு வேரியண்ட்களும்- பிளாக், கெனி கிரே மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே, ரிபல் ரெட் மெட்டாலிக் மற்றும் டிசென்ட் புளூ மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஹோண்டா ஷைன் 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம், மேம்பட்ட ஸ்மார்ட் பவர், ஹோண்டா ACG ஸ்டார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் OBD 2 மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், இன்டகிரேட் செய்யப்பட்ட ஹை பீம் ஃபிலாஷர், வெளிப்புற ஃபியூவல் பம்ப் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஈக்வலைசர் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக் உள்ளது. இத்துடன் ஹோண்டாவின் விசேஷமான பத்து ஆண்டுகள் வாரண்டியுடன் கிடைக்கிறது.

    Next Story
    ×