என் மலர்tooltip icon

    பைக்

    ரீ-எண்ட்ரிக்கு ரெடியாகும் பஜாஜ் குரூஸர் பைக் - லீக் ஆன முக்கிய தகவல்
    X

    ரீ-எண்ட்ரிக்கு ரெடியாகும் பஜாஜ் குரூஸர் பைக் - லீக் ஆன முக்கிய தகவல்

    • பைக்கின் மொத்த எடை 310 கிலோ, வீல்பேஸ் 1,490 மிமீ, அகலம் 806 மிமீ, நீளம் 2,210 மிமீ மற்றும் உயரம் 1,070 மிமீ இருக்கும்.
    • இந்த யூனிட் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    குரூஸர் பைக் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இது ஆரம்பத்தில் 180 சிசி மோட்டார்சைக்கிளாக அறிமுகப்படுத்தப்பட்ட அவெஞ்சர் வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் இது 160 சிசி மற்றும் 220 சிசி மாடலை பெற்றது. பின்னர், 180 சிசி வெர்ஷன் நிறுத்தப்பட்டது, தற்போதைய வரிசையில் 160 ஸ்ட்ரீட் மற்றும் 220 குரூஸ் மட்டுமே விற்பனையில் உள்ளன.

    220 சிசி குரூஸர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பஜாஜ் ஆட்டோ இப்போது அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 மாடலை மீண்டும் கொண்டு வர உள்ளது. பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை விற்பனை செய்வதற்கான அனுமதி கோரி ஏற்கனவே டெல்லி போக்குவரத்துத் துறையில் விண்ணப்பித்துள்ளது. புதிய பைக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, இதுபற்றிய ஆவணம் ஆன்லைனில் கசிந்தது.

    இதன் மூலம் இந்த பைக் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விண்ணப்ப ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில், அவெஞ்சர் 220 குரூஸ் பைக்கின் என்ட்ரி லெவல் மாடலாகவும், அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் இந்த பிரிவில் டாப் எண்ட் மாடலாகவும் இருக்கும்.

    இந்த பைக்கின் மொத்த எடை 310 கிலோ, வீல்பேஸ் 1,490 மிமீ, அகலம் 806 மிமீ, நீளம் 2,210 மிமீ மற்றும் உயரம் 1,070 மிமீ இருக்கும். இது 220 க்ரூஸை விட சற்று சிறியதாக ஆக்குகிறது. மேலும், இது விண்ட்ஷீல்ட் மற்றும் பில்லியன் பேக்ரெஸ்ட் ஆகியவற்றை இழக்கும்.

    அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220, குரூஸர் மோட்டார்சைக்கிளின் ஸ்போர்ட் வெர்ஷனாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் அலாய் வீல்கள், ரியர்-வியூ மிரர்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள், எக்ஸாஸ்ட் மஃப்ளர் கவர், முன் மற்றும் பின் ஃபெண்டர்கள் மற்றும் எஞ்சின் கேசிங் உள்ளிட்டவை பிளாக்டு-அவுட் செய்யப்பட்டுள்ளன.

    மெக்கானிக்கல் பிரிவில், இந்த பைக் 8,500 rpm இல் 18 hp பவர், 7,000 rpm இல் 17 Nm டார்க் வெளிப்படுத்தும் 220cc ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×