search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் யமஹா பைக்குகள் - இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்
    X

    விரைவில் இந்தியா வரும் யமஹா பைக்குகள் - இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்

    • யமஹா நிறுவனத்தின் 2023 R15, FZX மற்றும் MT15 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • சமீபத்தில் இந்தோனேசிய சந்தையில் யமஹா R15 அக்ரசிவ் கிரே வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    யமஹா நிறுவனம் பிரீமியம் இருசக்கர வாகனங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பட்ஜெட் ரக கம்யுட்டர் மற்றும் ஸ்கூட்டர்களை வழங்காமல் இருக்கும் ஒரே நிறுவனமாக யமஹா இருக்கிறது. இந்திய சந்தையில் யமஹாவின் பிரீமியம் மாடல்களில் R15, FZX மற்றும் MT15 உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவைதவிர யமஹா நிறுவனம் தனது பாரம்பரியம் மிக்க RX போன்ற பிராண்டுகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இத்துடன் 125 முதல் 155சிசி பிரிவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளிலும் யமஹா ஈடுபட்டு வருகிறது. இதனிடையே யமஹா தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை 2023 ஆண்டிற்கு அப்டேட் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 2023 யமஹா R15, FZX மற்றும் MT15 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், புதிய 2023 மாடல்களின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி 2023 யமஹா R15 மாடலில் கிரே நிற பெயிண்டிங், ஆங்காங்கே எல்லோ நிறம் மற்றும் கோல்டன் நிற யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது யமஹா R15M வொர்ல்டு ஜிபி 60th எடிஷன் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய 2023 MT15 மாடல் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இது யமஹா ஏற்கனவே வழங்கி வரும் மெட்டாலிக் பிளாக் நிறம் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய எடிஷனில் ரெட் அலாய் வழங்கப்பட்டு இருக்கிறது. மெட்டாலிக் பிளாக் மற்றும் ஃபுளுரோசெண்ட் ரெட் வீல்களை கொண்ட நிறத்தை யமஹா இதுவரை வழங்கியது இல்லை. 2023 FZX மாடலும் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.

    2023 FZX மாடலில் முற்றிலும் புதிய புளூ நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது யமஹா தனது FZX மெட்டாலிக் புளூ ஆப்ஷனில் வழங்கியதை போன்று காட்சியளிக்கவில்லை. மாறாக இது MT15 மற்றும் R15 மாடல்களில் வழங்கப்படும் ரேசிங் புளூ நிறம் போன்று காட்சியளிக்கிறது. புதிய நிறம் தவிர 2023 FZX மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை பெற இருக்கிறது.

    Photo Courtesy: Rushlane

    Next Story
    ×