search icon
என் மலர்tooltip icon

    பைக்

    2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் இந்தியாவில் அறிமுகம்

    • 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன் உள்ளது.
    • கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் எலெக்டிரானிக் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன் உள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் எலெக்டிரானிக் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.கேடிஎம் நிறுவனத்தின் 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 46 ஆயிரத்து 651, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய 2023 மாடலில் சமீபத்திய புகை விதிகளுக்கு பொருந்தும் மெக்கானிக்கல் அப்டேட்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதன்படி புதிய மாடலிலும் 248.76சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் போஷ் எலெக்டிரானிக் ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 29.6 ஹெச்பி பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இவைதவிர 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட்கள் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், சிறிய விண்ட்ஸ்கிரீன், 14.5 லிட்டர் ஃபியூவல் டேன்க், 85mm ஸ்ப்லிட் ஸ்டைல் சீட், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், முன்புறம் 19 இன்ச் மற்றும் பின்புறம் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் எலெக்டிரானிக் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    சஸ்பென்ஷனுக்கு 43mm அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோட் செய்யப்பட்ட மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 320mm சிங்கில் டிஸ்க், 230mm சிங்கில் ரோட்டார் மற்றும் ஃபுளோடிங் கேலிப்பர் உள்ளது. இந்திய சந்தையில் 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் சுசுகி வி ஸ்டார்ம் SX, ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பெனலி TRK 251 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×