என் மலர்

  பைக்

  டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2
  X
  டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2

  டுகாட்டி நிறுவனத்தின் பிரீமியம் பைக் இந்தியாவில் அறிமுகம் - விலை இவ்வளவா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டுகாட்டி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.


  இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 சீரிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. F 900 XR மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

  புதிய டுகாட்டி மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 5 இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே, கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த மாடலில் ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டியுரோ என நான்கு விதமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதன் எஸ் வேரியணட்டில் குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம், டுகாட்டி கார்னெரிங் லைட்கள் மற்றும் டுகாட்டி ஷிப்ட் அப் அண்ட் டவுன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. 

  டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிளில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி, டெஸ்டா-ஸ்டிரெட்டா, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த என்ஜின் 111.5 பி.ஹெச்.பி. பவர், 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

  டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2

  இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை ஐந்து கிலோ குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் மல்டிஸ்டிராடா வி2 மாடலின் எஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கை ஹூக் சஸ்பென்ஷன் இவோ செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இத்துடன் மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 மில்லிமீட்டர் ரோட்டார்கள் மற்றும் பிரெம்போ மோனோபிளாக் கேலிப்பர்கள், பின்புறம் 265 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பிரெம்போ கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கிற்கு டுவின் பாட் ஹெட்லைட், செமி ஃபேரிங், உயரமான விண்ட்-ஸ்கிரீன், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்திய சந்தையில் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 ரெட் லிவரி ரூ. 14 லட்சத்து 65 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 எஸ் கிரெ லிவரி ரூ. 16 லட்சத்து 84 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×