என் மலர்
ஆட்டோமொபைல்

யமஹா XSR700 - கோப்புப்படம்
விரைவில் அறிமுகமாகும் யமஹா 125சிசி மோட்டார்சைக்கிள்
யமஹா நிறுவனம் நியோ-ரெட்ரோ பிரிவில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
யமஹா நிறுவனம் சிறிய ரக XSR மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நியோ-ரெட்ரோ ஸ்டைலிங் சார்ந்த மாடல் ஆகும்.
தற்போது யமஹா நிறுவனம் MT-125 நேக்கட் மற்றும் R125 ஸ்போர்ட் பைக் மாடல்களை சில ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. எனினும், ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா CB125R மாடல் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதிய XSR125 படங்களை யமஹா இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய யமஹா XSR125 தோற்றத்தில் XSR155 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 125சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 15 பிஹெச்பி பவர், 11.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
யமஹா XSR125 மாடல் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் 292 எம்எம் டிஸ்க், பின்புறம் 220 எம்எம் டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய யமஹா XSR125 இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
Next Story






