என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் டிவிஎஸ் செஸ்ட் 110 பிஎஸ்6 அறிமுகம்
Byமாலை மலர்24 July 2020 6:40 AM GMT (Updated: 24 July 2020 6:40 AM GMT)
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய செஸ்ட் 110 பிஎஸ்6 மாடல் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் புதிய செஸ்ட் 110 பிஎஸ்6 மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்கூட்டர் துவக்க விலை ரூ. 58460 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 7 ஆயிரம் விலை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர் ஹிமாலயன் ஹை சீரிஸ் மற்றும் மேட் சீரிஸ் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவை ரெட், புளூ, பர்ப்பிள், பிளாக், எல்லோ மற்றும் டர்குயிஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
டிவிஎஸ் செஸ்ட் 110 பிஎஸ்6 மாடல் தோற்றத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதில் கன்வென்ஷனல் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல் கொண்டிருக்கிறது. இதில் 19 லிட்டர் அன்டர் சீட் ப்ரோவிஷன் மற்றும் முன்புறம் சிறிய கம்பார்ட்மென்ட் வழங்கப்படுகிறது.
புதிய டிவிஎஸ் செஸ்ட் மாடலில் 110 சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 7.6 பிஹெச்பி பவர், 8.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இருபுறங்களிலும் 10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
Next Story
×