என் மலர்
ஆட்டோமொபைல்

2020 யமஹா போல்ட்
2020 யமஹா போல்ட் குரூயிசர் அறிமுகம்
யமஹா நிறுவனத்தின் 2020 போல்ட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 போல்ட் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 யமஹா போல்ட் மாடல் பாபர் ஸ்டைல் ரெட்ரோ தீம் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பில் புதிய 2020 யமஹா போல்ட் மாடலில் டியர்-டிராப் வடிவம் கொண்ட ஃபியூயல் டேன்க், மோட்டார்சைக்கிள் முழுக்க குறைந்த அளவு கிராஃபிக்ஸ் மற்றும் மிக எளிமையான பாடி பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. யமஹா போல்ட் மாடலில் இருக்கை தரையில் இருந்து 690 எம்எம் அளவு உயரத்தில் இருக்கிறது.

இத்துடன் எல்இடி லைட்டிங், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரெட்ரோ ஸ்டைல் இன்டிகேட்டர்கள், பொசிஷன் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020 யமஹா போல்ட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு மற்றும் ஆர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இரு வேரியண்ட்களிலும் வீல்கள் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப் மட்டுமே வித்தியாசமாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆர் வேரியண்ட்டில் அலாய் ட்ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. யமஹா போல்ட் ஆர் மாடலின் சஸ்பென்ஷனில் கோல்டு ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன.
2020 யமஹா போல்ட் ஸ்டான்டர்டு மற்றும் ஆர் வேரியண்ட்களிலும் 942சிசி வி ட்வின் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 53 பிஹெச்பி பவர், 80 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
Next Story






