என் மலர்
ஆட்டோமொபைல்

பஜாஜ் பல்சர் 180எஃப் பி.எஸ்.6
இந்தியாவில் பஜாஜ் பல்சர் 180எஃப் பி.எஸ்.6 மாடல் அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180எஃப் பி.எஸ்.6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 180எஃப் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 1.08 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளில் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பி.எஸ்.6 ரக 178.6 சிசி என்ஜின் 16.8 பி.ஹெச்.பி. பவர், 14.52 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பி.எஸ்.4 என்ஜினும் இதே செயல்திறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.6 ரக என்ஜின் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்விக மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முந்தைய மாடல்களை போன்றே முன்புறம் டெலிஸ்கோபிக் ஆன்டி-ஃபிரிக்ஷன் புஷ் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஐந்து வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நைட்ராக்ஸ் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260 எம்.எம். டிஸ்க் மற்றும் பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் பிளாக் ரெட் மற்றும் நியான் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.
முன்னதாக பஜாஜ் நிறுவன வாகனங்களுக்கான சர்வீஸ் மற்றும் வாரண்டியை நீட்டிப்பதாக அறிவித்தது. இந்த சலுகை பஜாஜ் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






