search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6
    X
    2020 ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6

    2020 ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2020 யுனிகான் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் யுனிகான் மோட்டார்சைக்கிள் பி.எஸ்.6 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய 2020 ஹோண்டா யுனிகான் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 93,593 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் யுனிகான் 150 ஏ.பி.எஸ். மாடலை விட ரூ. 13,500 வரை அதிகம் ஆகும். புதிய மாடல் அறிமுகமாகி இருப்பதை தொடர்ந்து பழைய 150 சிசி விற்பனை நிறுத்தப்படுகிறது.

    அந்த வகையில் இனி யுனிகான் 160சிசி மாடல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். தற்போதைய சி.பி. யுனிகான் 160 மாடலின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது. புதிய மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் மட்டுமின்றி மேம்பட்ட வடிவமைப்பு, முன்பை விட அதிக சவுகரியம் வழங்குவதோடு என்ஜினை ஆஃப் செய்யும் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6

    புதிய ஹோண்டா யுனிகான் 160 பி.எஸ்.6 மாடலில் 162.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ஹோண்டா இகோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.73 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம்., 14 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்டிருக்கும் 2020 யுனிகான் பி.எஸ்.6 மாடலுக்கு ஹோண்டா நிறுவனம் ஆறு வருடங்களுக்கு வாரண்டி வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள்- பியல் இன்ஜினியஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×