search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜாவா பெராக்
    X
    ஜாவா பெராக்

    அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஜாவா பெராக்

    ஜாவா நிறுவனத்தின் புதிய பெராக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஜாவா நிறுவனம் பெராக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே மோட்டார்சைக்கிள் ரூ. 1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு ரூ. 6000 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜனவரி 1, 2020 துவங்குகிறது. இதன் விநியோகம் ஏப்ரல் 2, 2020 துவங்கும் என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஜாவா மோட்டார்சைக்கிள்களும் இதேபோன்று தாமதமாகவே விநியோகம் செய்யப்பட்டது.

    ஜாவா பெராக்

    புதிய பெராக் மோட்டார்சைக்கிள் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இது ஒற்றை இருக்கை கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் மிதக்கும் இருக்கை, பார்-எண்ட் கண்ணாடிகள், சாப்டு ஃபென்டர்கள், ஸ்டபி எக்சாஸ்ட் மஃப்ளர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜாவா பெராக் பாபர் மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 334சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 30 ஹெச்.பி. பவர், 31 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் ஜாவா மற்றும் 42 மாடல்களில் உள்ளதை விட அளவில் பெரியதாக இருக்கிறது.

    ஜாவா மற்றும் 42 மாடல்கள் 27 ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெராக் மாடலில் வித்தியாசமான சப்-ஃபிரேம் மற்றும் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மோனோஷாக் மற்றும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×