என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்

X
டுகாட்டி பனிகேல் வி 4 ஆர்
இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வாங்க இருவர் முன்பதிவு
By
மாலை மலர்27 July 2019 9:08 AM GMT (Updated: 27 July 2019 9:08 AM GMT)

இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளை வாங்க இரண்டு பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர்.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளை வாங்க இந்தியாவில் இரண்டு பேர் முன்பதிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மொத்தமே ஐந்து யூனிட்கள் தான் விற்பனை செய்யப்படும் என டுகாட்டி அறிவித்திருக்கிறது. அந்த வகையில் டுகாட்டி இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் முன்பதிவு செய்திருக்கிறார். இவருக்கு மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மாடலில் 998 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி-4 மோட்டார் பம்ப் உள்ளது. இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மோட்டார்சைக்கிளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.
இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் இந்தியாவில் விற்பனையாகும் சட்டப்பூர்வமான உருவாகியிருக்கும் அதிவேக மோட்டார்சைக்கிள் ஆகும்.
Next Story
×