என் மலர்

  ஆட்டோமொபைல்

  பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். இந்திய விலை விவரம்
  X

  பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். இந்திய விலை விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajPulsar  இந்தியாவில் எந்த ஒரு மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பாளரும் இனிமேல் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதி இல்லாத வாகனங்களைத் தயாரிக்க முடியாது. இதனால் அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் தங்களது வாகனங்கள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதியை கூடுதல் சிறப்பம்சமாக சேர்த்து வருகின்றனர். 

  அந்த வகையில் இளைஞர்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ்.160 மோட்டார்சைக்கிளில் தற்போது ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படுகிறது. 

  கடந்த சில மாதங்களாகவே பஜாஜ் நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதியை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  புதிதாக ஏ.பி.எஸ். யூனிட் தவிர மோட்டார்சைக்கிள் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலில் 160.3 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. 

  இந்த என்ஜின் 15.5 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. 

  இந்தியாவில் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் விலை ரூ.85,939 முதல் துவங்கி ரூ.92,595 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×