என் மலர்

  ஆட்டோமொபைல்

  பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ். இந்திய விலை வெளியானது
  X

  பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ். இந்திய விலை வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அவெஞ்சர் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajAvenger  குரூயிஸ் மோட்டார்சைக்கிளில் பஜாஜ் மாடலின் அவெஞ்சர் ரக மோட்டார்சைக்கிள் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் 180 சி.சி. கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. 

  தற்போது அதற்குப் பதிலாக 160 மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்கிறது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.

  குரூயிஸ் மாடலில் 220 சி.சி. மாடலைத் தொடர்ந்து 180 சி.சி. மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 சி.சி. மாடலுக்குப் பதிலாக தற்போது 160 சி.சி. கொண்ட அவெஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.   இந்த என்ஜின் 15.5 பி.ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 180 சி.சி. மாடலுக்கும் இந்த மாடலுக்கும் பெருமளவு வித்தியாசம் கிடையாது. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர் பின்புறம் கொண்டது. 

  இந்தியாவில் இதன் விலை ரூ.81,036 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
  Next Story
  ×