search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    எலெக்ட்ரிக் பைக் சோதனை செய்யும் ராயல் என்பீல்டு?
    X

    எலெக்ட்ரிக் பைக் சோதனை செய்யும் ராயல் என்பீல்டு?

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து தற்போது வெளியான தகவல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் ஆரம்பகட்ட எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப் மாடல்களை இந்தியாவில் சோதனை செய்ய ராயல் என்பீல்டு துவங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இந்த எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை துவங்கி உள்ள நிலையில், தற்போது விற்பனை செய்து வரும் சில மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கடந்த ஆறு முதல் எட்டு மாத காலமாக முதலீடு செய்து வருவதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. இதற்காக ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில் இருந்து புது திறமையாளர்களை பணியில் சேர்த்து இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் முன் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் பிரிவில் எந்த மாடல்களையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்யவில்லை. அந்த வகையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு இணைய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவரும் மாடல்களை எதிர்பார்க்கிறது. எனினும், ராயல் என்பீல்டு இந்த பிரிவில் எந்த மாடலையும் கொண்டிருக்கவில்லை.

    Next Story
    ×