search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    விரைவில் இந்தியா வரும் புது கவாசகி பைக்
    X

    விரைவில் இந்தியா வரும் புது கவாசகி பைக்

    • காவசகி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த மாடல் அடுத்த மாதத்தின் கடைசி வாரத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புது மோட்டார்சைக்கிள் W175 ஆகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் நின்ஜா 300 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது.

    முன்னதாக கவாசகி W175 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக W175 அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய கவாசகி W175 விலை ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.


    இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. கவசாகி நிறுவனம் புதிய W175 தான் இந்தியாவில் அறிமுகமாகும் என இதுவரை தெரிவிக்கவில்லை. அந்த வகையில் கவாசகி நிறுவனம் Z400 மாடலையும் இந்தியாவுக்கு கொண்டு வரலாம். ஏற்கனவே நின்ஜா 400 மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதிய கவாசகி Z400 மாடல் இந்திய சந்தையில் கேடிஎம் 390 டியூக் மற்றும் பிஎம்டபிள்யூ G310 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் கவாசகி நிறுவனம் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 399சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×