search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    நீர் புகுந்த கார் இன்டீரியரை விரைந்து சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!
    X

    நீர் புகுந்த கார் இன்டீரியரை விரைந்து சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!

    • கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமமான காரியம் ஆகும்.
    • கார் இன்டீரியரில் ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும்.

    மழை வெளுத்து வாங்கும் கனமழை காலமோ அல்லது நீர்நிலைகளுக்கு எடுத்து செல்வதோ கார் இன்டீரியரில் எப்போது வேண்டுமானாலும் எளிதில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் தான். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும், இதனை முழுமையாக தவிர்ப்பது முடியாத காரியம் தான். அந்த வகையில், ஈரமாகும் கார் இன்டீரியரை விரைந்து காய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

    மழை பெய்யும் போது சன்ரூஃப் லீக் அல்லது ஜன்னல் வழியே கார் இன்டீரியரில் நீர்புகும் சூழல் ஏற்பட்டால், எதில் பிரச்சினை ஏற்பட்டது என்று உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை நீர் 3 செமீ அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர் உதவியை நாடுவதே சிறந்தது.

    டிரெயின் பிளக்:

    பெரும்பாலான கார்களில் இன்டீரியரில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு டிரெயின் பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி இன்டீரியரில் உள்ள நீரை வெளியேற்றலாம். சில கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமான காரியம் ஆகும்.

    மைக்ரோஃபைபர் துணி:

    தரமான மைக்ரோஃபைபர் துணி அல்லது டவல்களை கொண்டு நீரை முடிந்த வரை உறிஞ்சி அதனை வெளியில் பிழிந்துவிடலாம். இவ்வாறு செய்யும் போது கார்களின் இன்டீரியர் அதிவேகமாக காய்ந்து விடும். முதலில் செய்யும் போது, இந்த வேலை செயலற்றதாக தோன்றும். ஆனால், இதுவே சிறப்பான வழிமுறை ஆகும்.

    காற்றாடி:

    இனி அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, போர்டபில் காற்றாடி கொண்டு ஒரே திசையில் வீச செய்ய வேண்டும். சமயங்களில் ஹேர் டிரையர் போன்ற சாதனங்களை கொண்டும் இன்டீரியரில் உள்ள ஈரத்தை சரி செய்யலாம். இது கார் இன்டீரியரில் உள்ள ஈரத்தை பெருமளவுக்கு நீக்கிவிடும்.

    ஈரத்தன்மை:

    கார்களில் நீர் புகுந்தால், நீரை எப்படியோ வெளியேற்றி விட முடியும். எனினும், அதன் பிறகு ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும். இதற்கு சிலிகா ஜெல் பயன்படுத்தலாம். கார் இன்டீரியரை சுற்றி சிலிகா ஜெல் பாக்கெட்களை வைத்தால் ஈரத்தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.

    Next Story
    ×