search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இங்கிலாந்தில் காணாமல் போன பெண்ட்லி கார் பாகிஸ்தானில் கண்டெடுப்பு
    X

    இங்கிலாந்தில் காணாமல் போன பெண்ட்லி கார் பாகிஸ்தானில் கண்டெடுப்பு

    • இங்கிலாந்து நாட்டில் திருடு போன பெண்ட்லி நிறுவனத்தின் முஸ்லேன் கார் பாகிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
    • காணாமல் போன காரை சுங்கத் துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் மீட்டுள்ளனர்.

    உலகம் முழுக்க ஆடம்பர கார் மாடல்களை திருடர்களிடம் பறிகொடுக்காமல் இருக்க அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. இங்கிலாந்தில் காணாமல் போன பெண்ட்லி முஸ்லேன் மாடல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் இந்த காரை மீட்டுள்ளனர்.

    திருடப்பட்ட கார் பற்றி இங்கிலாந்து தேசிய குற்றவியல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கராச்சியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டில் இந்த கார் கண்டறியப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி காரை திருடியவர்கள் அதில் இருந்த டிராக்கிங் கருவியை நீக்கவோ அல்லது ஆப் செய்யவோ இல்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    டிராக்கர் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததை அடுத்து இங்கிலாந்தில் இருந்த அதிகாரிகள் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தை சரியாக கண்டறிந்துள்ளனர். பின் திருடப்பட்ட கார் பற்றிய விவரங்களை இங்கிலாந்து அதிகாரிகள் பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்ட்லி முஸ்லேன் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    கண்டறியப்பட்ட காருக்கு பாகிஸ்தானில் பயன்படுத்தி வந்த நபர் சரியான ஆவணங்களை கொடுக்காத காரணத்தால் சுங்கத்துறை அதிகாரிகள் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரை திருட்டுத் தனமாக பயன்படுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். இவருடன் காரை அவருக்கு விற்ற முகவரும் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட காரின் நம்பர் பிளேட் சட்டவிரோதமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×