என் மலர்
ஆட்டோமொபைல்

டாடா அல்ட்ரோஸ்
தனது பாணியில் ஒலிம்பிக் வீரர்களுக்கு பரிசளிக்கும் டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட இந்திய வீரர்களுக்கு தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸ் காரை பரிசாக வழங்குகிறது. இதற்கான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

"இந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று, பல்வேறு இளம் வீரர்கள் தங்கள் வழியை பின்பற்ற ஊக்கம் கொடுத்துள்ளனர். இவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், இவர்களது கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அல்ட்ராஸ் மாடலின் தங்க நிற வேரியண்டை வழங்குகிறோம்."
"உலகளவில் அதீத திறன் பெற்ற வீரர்களை எதிர்த்து விளையாடிய நம் நாட்டு வீரர்கள் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களை வென்று மேலும் பல தடகள வீரர்கள் உருவாக உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்" என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
Next Story






