search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    போக்ஸ்வேகன் விர்டுஸ்
    X
    போக்ஸ்வேகன் விர்டுஸ்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் போக்ஸ்வேகன் விர்டுஸ்

    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது.


    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய விர்டுஸ் செடால் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த கார், முற்றிலும் மறைக்கப்படாத நிலையில் மும்பை அருகில் சோதனை செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    முன்னதாக 2017 ஆண்டு இதே மாடல் தென் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் MQB-AO பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் வென்டோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம்  செய்யப்படலாம் என தெரிகிறது.

    இந்த கார் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறரப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படலாம்.
    Next Story
    ×