search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆர்டிஒ
    X
    ஆர்டிஒ

    ரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போன பேன்சி நம்பர்

    பெங்களூருவில் சொகுசு காருக்கு 0001 என்ற வாகன பதிவு எண்ணை சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு தொழில் அதிபர் ஏலம் எடுத்தார்.


    பெங்களூரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாகன பதிவு பேன்சி எண்களுக்கான ஏலம் நடைபெற்றது. அதாவது கேஏ01-எம்வி எனும் சீரிசுடன் தொடங்கும் பேன்சி எண்களான 0001, 9999, 0009, 1111 உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது. 

    இந்த வாகன பதிவு எண்கள் இலகுரக வாகனங்களுக்கானவை ஆகும். முதலாவதாக 0001 என்ற பதிவு எண்ணை அதிகாரிகள் ஏலம் விட்டனர். அந்த எண்ணை பெங்களூருவை சேர்ந்த தொழில்அதிபரான குமால் முஸ்தபா என்பவர் ரூ.10¾ லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.

     கோப்புப்படம்

    அவர், புதிதாக விலை உயர்ந்த ஒரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அந்த சொகுசு காரின் பதிவு எண் பேன்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் பதிவு எண்ணை ரூ.10¾ லட்சம் கொடுத்து வாங்கியது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் ஒரு பேன்சி வாகன பதிவு எண் அதிக விலைக்கு ஏலம் போய் இருப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுபோல, 9999 என்ற பதிவு எண் ரூ.4.15 லட்சத்திற்கும், 0009 என்ற பதிவு எண் ரூ.3¾ லட்சத்திற்கும், 0999 என்ற பதிவு எண் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும், 0555 என்ற வாகன பதிவு எண் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் ஏலம் போய் இருந்தது.

    ஒட்டு மொத்தமாக 50 பேன்சி வாகன எண்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்ததாகவும், அவற்றில் 15 பேன்சி எண்களை வாகன ஓட்டிகள் ஏலம் எடுத்திருப்பதாகவும், இதன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ரூ.29 லட்சத்து 55 ஆயிரம் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×