search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பஜாஜ் ஆட்டோ லோகோ
    X
    பஜாஜ் ஆட்டோ லோகோ

    மீண்டும் சோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அர்பனைடே ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஜாஜ் அர்பனைட் பிராண்டிங்கில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் பஜாஜ் அர்பனைட் பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய புகைப்படங்களின் படி பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டரில் சிங்கில்-பீஸ் கிராப் ரெயில், பில்லியன் பேக்ரெஸ்ட் உள்ளிட்டவை காணப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் எக்சாஸ்ட் கேனிஸ்டர் தற்போதைய புகைப்படங்களில் காணப்படுகிறது.

    பஜாஜ் அர்பனைட் ஸ்பை படம்

    புதிய ஸ்கூட்டரில் டிரெயில்-லிண்க், சிங்கில்-சைடு சஸ்பென்ஷன், 12-இன்ச் அலாய் வீல்கள் முன்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இத்துடன் பேக்-லிட் ஸ்விட்ச்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஆனால் இதன் சோதனை புகைப்படங்கள் பலமுறை வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஸ்கூட்டர் தவிர அர்பனைட் வெர்டிக்கல் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பண்டிகை காலத்திற்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    புகைப்படம் நன்றி: ThrustZone
    Next Story
    ×