search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஏப்ரல் மாதம் முதல் கார் விலையை மாற்றும் டொயோட்டா
    X

    ஏப்ரல் மாதம் முதல் கார் விலையை மாற்றும் டொயோட்டா

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஏப்ரல் மாதம் முதல் மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. #Toyota



    டொயோட்டா இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருவதே கார் விலையை உயர்த்துவதற்கான காரணமாக டொயோட்டா தெரிவித்துள்ளது. புதிய விலை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. 

    உற்பத்தியில் விலை குறைக்க நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. உதிரி பாகங்களின் கட்டணம் தொடர்ந்து அதிகமாகி வருவதால் விலை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், தொடர்ந்து விலையை குறைக்கும் முயற்சிகளை டொயோட்டா மேற்கொள்ளும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராஜா தெரிவித்திருக்கிறார். 

    எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படுகிறது என்பது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய விலையை விற்பனையின் போது அமலாக்கிக் கொள்ள டொயோட்டா முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டாவின் புதிய மாடலை அறிமுகம் செய்தது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் ரூ.15.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எட்டு பேர் அமரக்கூடிய காரும் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஜி பிளஸ் வேரியண்ட் இன்னோவா க்ரிஸடா மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆகும். ஜி பிளஸ் வேரியண்ட் தனியார் மற்றும் போக்குவரத்து பயன்பாடு என இருவிதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஜி வேரியண்ட் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 343 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் மூலம் இன்னோவா பேஸ் வேரியண்ட் விலை ரூ.38,000 வரை குறைந்திருக்கிறது.
    Next Story
    ×