என் மலர்
ராசிபலன்

weekly rasipalan- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான வார ராசிபலன்
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
மேஷம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.
அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 5.8.2025 அன்று காலை 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலை தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வரலட்சுமி விரத நாட்களில் மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசிஅதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும்.
பூர்வ ஜென்ம புண்ணியப்படி இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். திருமண வயதில் உள்ள மகன் மகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும்.
5.8.2025 அன்று காலை 11.23 மணி முதல் 7.8.2025 அன்று இரவு 8.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சினை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். வரலட்சுமி விரத நன்நாளில் மஞ்சள் அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். பொன்,பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.
மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். காதலால் ஏற்பட்ட ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.
ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். 7.8.2025 அன்று இரவு 8.11-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. வரலட்சுமி நோன்பு அன்று வில்வ அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
கடகம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சூரியன் புதன் சேர்க்கை. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.
தற்போது குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு-கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.
சிலருக்கு திருமணத் தடை இருக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.வரலட்சுமி விரத நாளில் மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.






