என் மலர்
ராசிபலன்

weekly rasipalan 2.11.2025 to 8.11.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- கடகம் அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம்.
- மீனம் எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம்.
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3,6ம் அதிபதி புதனுடன் இணைந்து உள்ளார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். 7ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். பவுர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
ரிஷபம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் சூரியன் நீச்ச பங்கு ராஜயோகம் பெறுகிறார். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்றவரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.திருமண முயற்சி சாதகமாகும். விவாகரத்து வழக்குகள் ஒத்திப் போகும். நிதானமும், நம்பிக்கையும் அனைத்து இன்னல்களிலும் இருந்து உங்களை காப்பாற்றும். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். பவுர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
மிதுனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6-ம்மிடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் ராசி அதிபதி புதன் சேர்ந்து நிற்பது சுபித்துச் செல்லக்கூடிய பலன் அல்ல. பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமின் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். தாய்வழிச் சொத்து தேடி வரும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
கடகம்
அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய பாக்கிகள்இ வசூலாகும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் கூடும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும்.பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். அஷ்டமச் சனி உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும்.முதலீட்டாளர்களுக்கு வெளியூர், வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும்.சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது. 4.11.2025 அன்று பகல் 12.34 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
வெற்றிகரமான வாரம்.ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.ஆட்சி பலம் பெறும் சுக்கிரனால் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். நீச்ச பங்க ராஜயோக சூரியனால் அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.காலி மனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். 4.11.2025 அன்று பகல் 12.34 முதல் 6.11.2025 பகல் 11.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.
துலாம்
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரியன் சஞ்சரிக்கிறார்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும்.முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.விரும்பிய கடன் தொகை கிடைக்கும்.குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உதவியாக இருப்பார்கள்.பாகப்பிரி வினை சுமுகமாகும். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும்,கவுரவமும் கிடைக்கும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 6.11.2025 பகல் 11.47 முதல் 8.11.2025 பகல் 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.
விருச்சிகம்
கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 8,11ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்.பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். 8.11.2025 அன்று பகல் 11.14 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வை யால் ஆரோக்கியம் குறையும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.
தனுசு
முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசியை சனி பகவான் பார்க்கிறார். அஷ்டமஸ் தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு பகவான் சனி பகவானை பார்க்கிறார். வியாபாரத்தில் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப் பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் ஏற்படும் போட்டியை சமாளிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். . பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு.மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வ தால் நிம்மதி அதிகமாகும். பெண்க ளுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்க ளால் மகிழ்ச்சி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.
மகரம்
இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தாய்வழிச் சொத்தில் இளைய சகோதரத்தால் ஆதாயம் உண்டு. இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.வருமானம் மகிழ்ச்சியை தரும் விதத்தில் இருக்கும்.ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்கள் அகலும்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம்.ராசியில் உள்ள ராகுவை 3,10ம் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும் வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள்.அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வெகு நாட்களாக தாமதப்பட்ட பணிகள் இந்த வாரம் சாதகமாகும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும்.சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.
மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம். 3, 8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம்.பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச் சுமை அதிகரிக்கும். இடமாற்றம்,வீடு மாற்றம்,வாகன மாற்றம் போன்றவை ஏற்படலாம். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் வெற்றி நிச்சயம்.மனத் தடுமாற்றம் இருக்காது.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம்,யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.பிரதோஷ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.






