என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-03.08.25
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமைக்காக சில செலவுகளைச் செய்வீர்கள்.
ரிஷபம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்
இனிய வாழ்வமைய இறைவனை வழிபட வேண்டிய நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத் தில் அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
கடகம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பம் கொள்ளும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும்.
சிம்மம்
செல்வ நிலை உயரும் நாள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காண்பீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய பாதை புலப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.
கன்னி
மங்கலப் பொருட்களை வாங்குவதில் மனதை செலுத்தும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
நல்ல சந்தர்ப்பம் நாடி வரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் சிறிது கரையலாம். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் நாள். வாழ்க்கை வளம்பெற ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம்.
மகரம்
வளர்ச்சி அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
கும்பம்
செல்வாக்கு உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மீனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாமா என்று சிந்திப்பீர்கள்.






