என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் 26.12.2025: இவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்
    X

    இன்றைய ராசிபலன் 26.12.2025: இவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

    ரிஷபம்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்காகச் செய்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.

    கடகம்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். கடன் சுமை கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

    சிம்மம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    கன்னி

    தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தன வரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமூகமாக முடியும்.

    துலாம்

    விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

    விருச்சிகம்

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

    தனுசு

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தில் அமைதி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மகரம்

    பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    கும்பம்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளால் செலவு ஏற்படலாம்.

    மீனம்

    புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் அகலும்.

    Next Story
    ×