என் மலர்
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 2.3.2026: இந்த ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி கூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.
ரிஷபம்
வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத காரியம் எளிதில் முடிவடையும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும்.
கடகம்
தடைகள் அகலும் நாள். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபார விருத்தி கருதி புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள்.
சிம்மம்
வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும்.
கன்னி
முன்னேற்றம் கூடும் நாள். பல நாட்களாக வசூலாகாத கடன்கள் திடீரென வசூலாகலாம். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
விருச்சிகம்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
தனுசு
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கலாம்.
மகரம்
தடைகள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.
கும்பம்
பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். கடன் சுமை குறையும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மீனம்
விரயங்கள் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். இடம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும்.






